சக மாணவர்களுக்கு பாடம் நடத்தியதற்காக பேராசிரியர் தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து மாணவி தற்கொலை

மதுரையில் தகாத வார்த்தையால் பேராசிரியர் திட்டியதால் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் தகாத வார்த்தையால் பேராசிரியர் திட்டியதால் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
திருமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார் மகள் பத்மபிரியா, மதுரை கல்லூரியில் பிஎஸ்சி படித்தார். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று சக மாணவர்களுக்கு பாடம் குறித்து பத்மபிரியா விளக்கி கூறியதைக் கண்ட பேராசிரியர் முத்துக்குமார் என்பவர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து விஷம் அருந்திய பத்மபிரியா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்ய வேண்டும் என போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
Comments