பழங்குடியினருக்கான சாதிச் சான்று வழங்காதது குறித்த புகார்: தலைமைச் செயலாளர், 2 வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சம்மன்

0 752

பழங்குடியினருக்கான சாதிச் சான்று வழங்காதது குறித்த புகாரில் தலைமை செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 வருவாய் கோட்டாட்சியர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவின்  மனுவை விசாரணைக்கு ஏற்ற மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலாளர், திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments