மன்னராட்சி காலத்தை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது - துரைமுருகன்

0 3842
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என மன்னராட்சி காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என மன்னராட்சி காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

உலக நாடுகளில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்கு கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் விவசாயாகள் பிரச்சனையில் ஏன் வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரும், உச்ச நீதிமன்றம், ஆளுநரே 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளது என கூறிய பிறகும் ஆளுநர் தனக்கு அதிகாரம் இல்லை, குடியரசு தலைவருக்கு தான் இருக்கு என கூறுவது ஏற்புடையது அல்ல என்றார்.

வேலூர் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் 'தேர்தல் சட்ட அலுவலகத்தை’ திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments