இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 100வது டெஸ்டில் சதம் அடித்து அசத்தல்

0 3017

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன் எடுத்தது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் மூன்று வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினாலும், கேப்டன் ஜோ ரூட் தனது நூறாவது டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார்.

ஜோ ரூட் 128 ரன் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுற்றது. இந்திய அணி வீரர் பும்ரா 2 விக்கெட்டையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments