மும்பையில் கழிவுப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து.. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின

மும்பையில் கழிவுப் பொருட்கள் கிடங்கில் தீப்பற்றியதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
மும்பையில் கழிவுப் பொருட்கள் கிடங்கில் தீப்பற்றியதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
மும்பை மான்குர்து என்னுமிடத்தில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் தீப்பிடித்தது.
தகவல் அறிந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். நெகிழிப் பொருட்கள், ரப்பர் டயர்கள் ஆகியவற்றில் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இந்தத் தீவிபத்தின்போது அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் காயமின்றி உயிர்தப்பினர்.
Comments