பெட்ரோல் பங்கில் இருந்து பணப்பையை திருடி செல்ல முயன்ற இளைஞர்கள்... துரத்தி பிடித்த ஊழியர்
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியரின் பணப்பையை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை சக ஊழியர்கள் துரத்திப் பிடித்தனர்.
காரியாபட்டி பெரியார் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், பெட்ரோல் நிரப்பும் இயந்திரத்தின் மேல் ஊழியர் ஒருவர் வைத்திருந்த பணப்பையை திருடி செல்ல முயன்றனர். சக ஊழியர்கள் ஒரு இளைஞரை துரத்திப் பிடித்த நிலையில் மற்றொருவர் தப்பிச்சென்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 100 மீட்டர் தூரத்தில் பதுங்கியிருந்த மற்றொருவரை கைது செய்தனர்.
Comments