அடேங்கப்பா! ஆதார் போல மெனு கார்ட்... இணையத்தில் வைரலாகும் தம்பதி

ஆதார் கார்ட் போல திருமண மெனு கார்டை வடிவமைத்த தம்பதி இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் திருமணங்கள் மிகவும் ஆக்கபூர்வமாகவும் தனித்துவமாகவும் மாறி வருகின்றன. உற்றார் உறவினற்கள் புடை சூழ நடைப்பெற்ற திருமணங்கள், மிகவும் நெருக்கமான உறவினர்களை மட்டுமே வைத்து சிறிய அளவிலேயே நடைப்பெற்று வருகின்றன. மற்ற சொந்தங்கள் திருமண லைவ் மூலம் ஆன்லைனில் இணைகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான திருமண மெனுவால் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றனர்.
கொல்கத்தாவின் ராஜர்ஹத் பகுதியை சேர்ந்தவர்கள், கோகல் சஹா- சுபர்ணா தாஸ் தம்பதி. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி திருமணம் நடைப்பெற்றுள்ளது. வட இந்தியாவில் சில பகுதிகளில், திருமண பத்திரிக்கையோடு திருமணத்தன்று பரிமாறப்படும் மெனுவையும் சேர்த்தே வழங்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது. இதனை வித்யாசமாக செயல்படுத்த நினைத்த தம்பதி, மெனுவை ஆதார் கார்ட் போல வடிவமைத்து வழங்கி வந்துள்ளனர்.
அந்த மெனுவில் மெயின் டிஷ் தொடங்கி சைட் டிஷ், செரிமான பீடா வரை வகை வகையான வெரைட்டிகள் அச்சிடப்பட்டுள்ளது . மேலும் இந்த ’மெனு ஆதார்’ இன்று ஒரு நாள் மட்டுமே... நாளை காலாவதியாகிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒரு தம்பதி மொய் பணத்தை கூகுள் பே, போன் பே மூலம் வசூலித்து வைரலாகினர் . தற்போது ஆதார் மெனு குறித்தான தம்பதிகளும் இணையத்தை கலக்கி வருகின்றனர்.
Comments