கடைசி வாய்ப்பில் குடிமைப் பணி தேர்வை தவறவிட்டவர்கள்: மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி

0 2005

கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு கடைசி வாய்ப்பில் குடிமைப் பணி தேர்வை எழுதாமல் தவற விட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யுபிஎஸ்சி நடத்திய தேர்வை எழுத முடியாதவர்கள், கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதனை ஏற்று கூடுதலாக ஒரு வாய்ப்பை வழங்க நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்வை எழுத முடியாத தேர்வர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments