12 சவரன் நகை திருட்டு: தடயத்தை அழிக்க இட்லிப்பொடியை தூவிச் சென்ற திருடர்கள்

0 1413

கள்ளக்குறிச்சியில் 12 சவரன் நகையைத் திருடி விட்டு தடயங்களை அழிக்க வீட்டில் இட்லிப் பொடியை தூவிச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜா நகரில் பழனிச்சாமி தனது வீட்டை சரியாக தாழிடாமல் அறையில் உறங்கச் சென்றுள்ளார். 

இதனை கவனித்த கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து ஹாலில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்து நகையைக் கொள்ளையடித்துள்ளனர்.

இட்லி பொடியைத் தூவினால் மோப்ப நாய் வந்து நுகரும் தன்மையை இழந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது என்பதனை கருத்தில் கொண்டு, கொள்ளையர்கள் இந்த நூதன திருட்டை அரங்கேற்றியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments