சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் ஐ.டி.பி.ஐ கன்சார்டியத்தில் 1,727 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடியிலும் சுரானா நிறுவனம் சிக்கியுள்ளதாக வழக்கு உள்ளது.
இந்த மோசடிகளில் கிடைத்த பணத்தை சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
சட்டவிரோத தங்க ஏற்றுமதி-இறக்குமதி, வங்கி மோசடி, ஜி.எஸ்.டி மோசடியில் பெறப்பட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடுகளாகவோ, சொத்துக்களாக வங்கியுள்ளார்களா என அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ஆவணங்களை கைப்பற்றி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments