2010-2020 ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 139 கோடி நன்கொடை வந்ததாகத் தேர்தல் ஆணையத்திடம் தகவல்

காங்கிரஸ் கட்சி 2019-2020 நிதியாண்டில் 139 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
புரூடன்ட் அறக்கட்டளை 31 கோடி ரூபாயும், ஜன்கல்யாண் அறக்கட்டளை 25 கோடி ரூபாயும், ஐடிசி நிறுவனம் 13 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளோர் ஒவ்வொருவரும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.
86 கோடியே 60 லட்ச ரூபாய் நன்கொடை வந்ததாகவும், 28 கோடியே 83 லட்ச ரூபாயைச் செலவிட்டதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.
புராக்ரசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலம் 46 கோடியே 77 லட்ச ரூபாய் பெறப்பட்டதாகவும், ஐடிசி நிறுவனத்திடம் இருந்து 5 கோடியே 39 லட்ச ரூபாய் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடை மற்றும் பங்களிப்பு மூலம் 143 கோடி ரூபாய் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.
Comments