தாய்லாந்து: சக்கர வண்டிகளை கட்டிக் கொண்டு ஜாக்கிங் செல்லும் உடல் ஊனமுற்ற நாய்கள்..!

0 1635

தாய்லாந்தில் உடல் ஊனமுற்ற நாய்கள், சக்கர வண்டிகளை கட்டிக் கொண்டு ஜாக்கிங் செல்வது காண்போரை கவர்ந்து வருகிறது.

விபத்தில் சிக்கி கால்களை இழந்த அல்லது காயமடைந்த நாய்கள் மற்றும் கைவிடப்பட்ட நாய்களை பாங்காங்கில் உள்ள தொண்டு நிறுவனம், மீட்டு பாதுகாப்பாக பராமரித்து வருகிறது.

கால்களை இழந்த நாய்களுக்கு, இயலாமையை போக்கும் வகையில், சக்கரம் பொருந்திய வண்டி ஒன்றையும் அவர்கள் தயார் செய்துள்ளனர்.

அந்த வண்டியில் தினமும் காலையில் ஜாக்கிங் செல்லும் செல்லப்பிராணிகள், அருகேயுள்ள நீர்நிலையில் குளித்து மகிழ்ந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments