வயதான தம்பதிக்கு உதவிய கண்ணியமான காவலர்...குவியும் பாராட்டு!

0 3098

ஆவடி அருகே தொலைந்த கைப்பையை உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைத்த தலைமைக் காவலருக்குப் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வசிப்பவர்கள் வயதான தம்பதி வெங்கடேசன் மற்றும் சுமதி.கணவன் மனைவி இருவரும் நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள பட்டாபிராமத்தில் அமைத்திருக்கும் தங்களுக்குச் சொந்தமான மனையைப் பார்க்கச் சென்றனர் . உடன், 10 ஆயிரம் பணம், இரண்டு சவரன் நகை, நிலத்தின் பத்திரம் ஆகியவை அடங்கிய கைப்பை ஒன்றையும் எடுத்துச் சென்றனர். மனையைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய தம்பதி, உடன் கொண்டு வந்த கைப்பையைக் காணவில்லை என்று தெரிந்தவுடன் பதறிப்போனார்கள்.

இந்நிலையில், பட்டாபிராம் தலைமைக் காவலர் செல்வகுமார், பணி முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பட்டாபிராம் மேம்பாலம் அருகே பை ஒன்று கீழே இருப்பதைப் பார்த்த அவர் அதைச் சோதனை செய்தார். தொடர்ந்து, பையிலிருந்த செல்போன் மூலம் வெங்கடேசனைத் தொடர்பு கொண்டு, அவர் வீட்டிற்கே நேரடியாகச் சென்று பையை ஒப்படைத்தார் செல்வகுமார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த தம்பதியினர் , செல்வகுமாரிற்கு தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியனை நேரில் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்தும் கூறினர்.

செல்வகுமாரின் நேர்மையைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் தீபா, அவரின் இந்த நேர்மையான செயலை சென்னை மாநகர் ஆணையர் மகேஷ் அகர்வாலின் பார்வைக்குக் கொண்டு சென்றார் .செல்வகுமாரின் கண்ணியமிக்க செயலை கௌரவிக்கும் வகையில், அவருக்குச் சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார் சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments