சென்னை விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை மற்றும் பவுடர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை மற்றும் பவுடர் பறிமுதல்
சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு விமானம் மூலம் கடத்த இருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரை மற்றும் பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக வந்திருந்த 3 பார்சல்களை சோதனையிட்ட போது, மேல்புறத்தில் வலி நிவாரணி மாத்திரைகளும், உள்ளே, எபிட்டீரின் என்ற ஒரு வகை போதை மாத்திரைகள் மற்றும் பவுடர் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 27 கிலோ அளவிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், பார்சலில் இருந்த முகவரி மற்றும் தொலைபேசி எண் போலி என தெரியவந்ததையடுத்து, பார்சலில் இருந்த ஏஜென்சி பதிவு அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments