கல்வி நிறுவனங்கள் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி - தமிழக உயர்கல்வித்துறை

தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வாரம் ஆறு நாட்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வாரம் ஆறு நாட்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மூடப்பட்டன.
அதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் டிப்ளமோ கல்லூரிகள் உட்பட அனைத்து இளநிலை, முதுநிலை கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள அரசாணையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, அனைத்து வகை கல்லூரிகளும் வாரத்தில் 6 நாட்கள் இயங்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments