சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் 10ந்தேதி தமிழகம் வருகை

0 1665
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் 10ந்தேதி தமிழகம் வருகை

மிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தலையொட்டி, செய்யப்படும் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய, வருகிற 10ஆம் தேதி, தலைமை தேர்தல் ஆணையர், தமிழகம் வர உள்ளார்.

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்வதுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம், தேர்தல் ஏற்பாடுகளுக்கான விபரங்களை கேட்டறிகிறார்.

பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணி தொடர்பாக, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதையும், தடுப்பது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments