இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்..! கொரோனா அச்சுறுத்தலால், ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

0 2372
இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்..! கொரோனா அச்சுறுத்தலால், ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

ந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கேப்டன் விராட் கோலி இல்லாமல் இந்தியா அணி வெற்றி பெற்ற நிலையில், தற்போது கோலியும் திரும்பியுள்ளதால், இந்திய அணி முழு பலத்துடன் காணப்படுகிறது.

மேலும் சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments