இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

0 24515
இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பி.இ, பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரையிலும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும், 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, எம்.இ, எம்.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி முதலாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை வகுப்புகள் நடத்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அனுமதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments