நாடு முழுவதும் இன்று ஐஐடி கேட் தேர்வு ஆரம்பம்..! சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்

0 3264
நாடு முழுவதும் இன்று ஐஐடி கேட் தேர்வு ஆரம்பம்..! சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ள ஐஐடி கேட் (GATE) தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2021- 22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 14ந் தேதி வரை பாடப் பிரிவு வாரியாகத் தேர்வுகள் நடக்க உள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தேர்வர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments