இதுவரை 17 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்துள்ளது இந்தியா

0 4878
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் 17 நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் 17 நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 56 லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்தை ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்திருப்பதாக வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.

இது தவிர வர்த்தக ரீதியாக சுமார் ஒரு கோடி டோஸ்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அடுத்து வரும் நாடுகளில் 5 லட்சம் டோஸ்களை இலவசமாக கரீபியன் நாடுகளுக்கும் தலா இரண்டு லட்சம் டோஸ்களை நிகாருகுவா மற்றும் பசிபிக் தீவுகளுக்கும் அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments