உ.பி.யில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன

0 1273

த்தரபிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பாதுகாப்புக்காக அவரது காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.

4 கார்கள் மோதிக் கொண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து சாலையில் சரியாக பார்க்க முடியவில்லை என்று கூறி பிரியங்கா காந்தி சென்ற காரையும் அதன் ஓட்டுனர் நிறுத்தினார்.

அப்போது காரில் இருந்து இறங்கிய பிரியங்கா காந்தி, காரின் முன்பக்க கண்ணாடியை துடைத்தார். பின்னர் ராம்பூர்  சென்ற பிரியங்கா, டெல்லியில் டிராக்டர் பேரணியில் விபத்தில் சிக்கி பலியான நவ்ரீத்சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments