தஞ்சை : மாப்பிள்ளை உள்பட திருமணத்தில் கலந்து கொண்ட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

0 3219

தஞ்சை மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சியில்  மாப்பிள்ளை உள்பட 15 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் நடுக்கடை கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடுக்கடை கிராம மக்களும், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்துகொண்டுனர். 

இந்நிலையில், திருமணம் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்து, நடுக்கடை கிராமத்தை சேர்ந்த இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தஞ்சை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், நடுக்கடை சென்ற மருத்துவ குழு  , திருமண விழாவில் பங்குபெற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர் . 30 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் மாப்பிள்ளை உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களில் 10 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள ஐந்து பேரும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ,  மண்டபத்தின் உரிமையாளருக்கு, கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததால் ரூ.50000 அபராதம் விதித்ததோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு வழங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments