வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை.. சேலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்...!

0 30363
சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 40 சவரன் நகைகளை திருடி சென்றனர்.

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 40 சவரன் நகைகளை திருடி சென்றனர்.

ராயர் பாளையம் பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் நேற்றிரவு வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கதவு தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்த அவரை முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் கட்டை, லிவர் போன்ற ஆயுத்ததால் தாக்கியதுடன், குடும்பத்தினரையும் தாக்கி ஒரு அறையில் கட்டிப்போட்டு, உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 27 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கத்தையும் திருடி சென்றனர்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த, குமாரசாமி, அவரது மனைவியையும் தாக்கிய மர்மகும்பல் 13 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments