சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35,976க்கு விற்பனை

0 822
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படுமென மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் இன்று சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 35 ஆயிரத்து 976 ரூபாய்க்கும், கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 497 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 72 ரூபாய் 20 பைசாவுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments