விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு: அமைச்சர் அமித்ஷா கண்டனம்

0 7759

டெல்லி எல்லைகளில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் அளிக்கும் ஆதரவை உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்துள்ளார்.

வெளிநாட்டு பிரபலங்கள் நடத்தும் எந்த பிரச்சாரமும் இந்தியாவின் ஒன்றுமையை குலைக்காது என அவர் டுவிட்டரில் திட்டவட்டமாக பதிவு செய்துள்ளார். இது போன்ற பிரச்சாரங்களால் இந்தியாவின் தலைவிதியை முடிவு செய்ய இயலாது என்றும், அதற்குப் பதிலாக  இந்தியாவின் வளர்ச்சி மேலும் உத்வேகம் அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவதூறு பிரச்சாங்களுக்கு எதிராக இந்தியா ஒன்றாக நின்று வளர்ச்சியை எட்டும்  என்ற ஹாஷ்டாக்கையும் அவர் தமது டுவிட்டரில் இணைத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments