பட்ஜெட்டுக்குப் பின் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடும் உயர்வு: வர்த்தகர்கள் அதிருப்தி

0 3242

உத்தரப்பிரதேசத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அம்மாநில வர்த்தகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஆயிரத்து 198 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் மாதம் இரு முறை விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலான பின் சிலிண்டர் ஒன்றுக்கு 190 ரூபாய்கள் உயர்ந்து தற்போது ஆயிரத்து 572 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்வு தங்களுக்கு பேரிடி என ஆக்ரா நகர விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments