ஒரு மரத்தின் மதிப்பு ரூ.72 லட்சத்திற்கு சமமானது: மரங்களை வெட்டுவது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

0 2424

சுற்றுச்சுழலை பாதுகாத்தல், மனிதர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குதல் என மரங்களின் 100 ஆண்டு ஆயுட்காலம் இன்றைய காலக்கட்டத்தில் 72 லட்ச ரூபாய்க்கு சமமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனிதர்களுக்கு ஆக்சிஜன் வழங்கி, சுற்றுச்சுழலை பாதுகாக்கும் மரங்களின் 100 வருட ஆயுட்காலம் 72 லட்ச ரூபாய்க்கு சமமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாரித்த உச்சநீதிமன்றம், மரங்கள் வெட்டப்பட்டதில் மத்திய அரசின் முறையான வழிமுறைகள் பின்பற்றபட்டுள்ளதா என்று அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments