வாத்தி கம்மிங் ஒத்து தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள்..! ஊரே கூடி உற்சாக ஆட்டம்

0 5503
வாத்தி கம்மிங் ஒத்து தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள்..! ஊரே கூடி உற்சாக ஆட்டம்

திருப்பதியில் பணி மாறுதல் பெற்று செல்லும் தலைமை ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலை மீது தூக்கி வைத்து, ஆதி வாசி பழங்குடி கிராம மக்கள், கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் மல்லுகுடா என்ற இந்த சிறிய கிராமம், ஆதிவாசிகளின் வழக்கப்படி, களை கட்டியது. இங்குள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நரேந்திரா, என்பவருக்கு, ஆதிவாசி மக்களின் பாரம்பரிய முறைப்படி, வழியனுப்பு விழா நடைபெற்றது.

பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பல் விழுந்த முதியவர்கள் வரை வீதியில் திரண்ட ஆதிவாசி மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கண் திறந்த தலைமை ஆசிரியரை, தலை மீது தூக்கி வைத்து ஆடிப்பாடி, கொண்டாடினர்,

ஆந்திராவின் ஆதி வாசி கிராம மக்கள் காட்டிய பாச மழையில், விடை பெற்று செல்லும் தலைமை ஆசிரியர் நரேந்திரா, திக்கு முக்காடி விட்டார்.

அறியாமை எனும் இருள் நீங்க ஒளிதரும் அறப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாதா - பிதா - குரு - தெய்வம் என்ற வரிசையில் இடம் பிடித்துள்ளனர், ஒழுக்கம் - நல்ல பழக்கம் - சிறந்த கல்வி என அறிவுக்கண்ணை திறக்கும் ஆசிரியர்கள், என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்பதே நிதர்சனம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments