பிரதமர் மோடி 7ம் தேதி அஸ்ஸாம் பயணம் ; இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் மோடி 7ந் தேதி அஸ்ஸாமில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி 7ந் தேதி அஸ்ஸாமில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
பிஸ்வநாத் சராலி மற்றும் சாரைதியோவில் அமைந்துள்ள இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், மாநில பொதுப்பணித்துறையின் சார்பில் 5000 கோடி ரூபாயில் செயல்படுத்தவுள்ள சாலைப்பணிகளையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக வருகிற 6-ந்தேதி அசாம் வரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8 லட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அசாமில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது.
Comments