மாளவிகா மோகனனை வச்சு செஞ்சிட்டாய்ங்க மீம்ஸ் மாஸ்டர்ஸ்..! பல்லை கடிச்சது குத்தமாடா..!

0 12480
மாளவிகா மோகனனை வச்சு செஞ்சிட்டாய்ங்க மீம்ஸ் மாஸ்டர்ஸ்..! பல்லை கடிச்சது குத்தமாடா..!

மாஸ்டர் படத்தில் பல்லைக் கடித்தபடி, நடிகர் விஜய்யை திட்டும் காட்சியில் நடித்த மாளவிகா மோகனனின் முகபாவனைகளை வைத்து, விதவிதமாக கேலிசெய்து மீம்ஸ் வெளியிட்டு ட்விட்டரை தெறிக்க விட்ட நிலையில், மீம்ஸ் மாஸ்டர்களைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா ? என்று ரசிகர்களை கேட்க வைக்கும் வகையில் ஒரு சில காட்சிகளில் நாயகியாக வந்து சென்றவர் மாளவிகா மோகனன்..!

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயை திட்டுவது போன்ற காட்சியில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆக்ரோஷ முகபாவத்தைக் காட்டியிருப்பார் மாளவிகா மோகனன். ஓடிடியில் படம் வெளியான நிலையில், அந்த காட்சியை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து வைத்து நெட்டிசன்கள் செய்து வரும் மீம்ஸ் சேட்டைகள் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளது.

பல் தேய்ப்பது.. சிக்கனைக் கடித்து இழுப்பது.. பபுல்கமில் முட்டை விடுவது... பர்கர் சாப்பிடுவது... பால் பாக்கெட்டை கடிப்பது.... பாட்டில் திறப்பது என மாளவிகாவை செதுக்கியுள்ளனர்.

மாளவிகாவின் வாய்க்கு போடுமே பூட்டு என்ற விளம்பரம் முதல் சினாக்ஸ் தின்பது, பற்களால் டிபன் பாக்ஸ் திறப்பது என்று மீம்ஸ் உருவாக்கிகள் செய்துள்ள சேட்டையால் டுவிட்டர் தெரிக்கின்றது. மாளவிகா மோகனனின் பற்களை கடிக்கும் காட்சிகளை கத்தரித்து, வின்னர் காமெடி, சந்திரமுகி டயலாக் என்று வீடியோவாகவும் கலாய்த்து வருகின்றனர்

தன்னை மீம்ஸ்கள் மூலம் கேலி செய்தவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்து தன்னுடைய மீம்ஸ்களை ரசிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன்

தன்னை ட்ரோல் செய்து மீம்ஸ் வெளியிட்டதை, மாளவிகா மோகனன் சகஜமாக எடுத்துக் கொண்ட நிலையில், தன்னை ட்ரோல் செய்தவர்களின் கணக்குகளை பிளாக் செய்து கீர்த்தி சுரேஷ் அதிரடி காட்டியதால் அவரையும் சுட்டிக்காட்டி ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.

தன்னை கலாய்ப்பதை கூட ரசிக்கும் பெருந்தன்மையான மனசு எனவும், விஜய் சொன்ன குட்டிஸ்டோரி படி வாழும் நாயகி என்றும் மாளவிகா மோகனனை கமெண்ட்களில் சிலர் புகழ்ந்துவருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments