2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்க மத்திய அரசு இலக்கு..!

2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்க மத்திய அரசு இலக்கு..!
2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார்.
கடந்தாண்டு ஏப்ரல்/மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோது, நாட்டில் உள்ள பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குகளில் முழு கொள்ளளவுக்கு கச்சா எண்ணெய்கள் வாங்கி நிரப்பப்பட்டதன் மூலம் சுமார் 5000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments