8-ந்தேதி புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

0 877
8-ந்தேதி புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

ருகிற 8-ந்தேதி புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை தொடங்கி உள்ளது.

தமிழக அரசு சார்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகாமில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி பழனி கோவில் யானை கஸ்தூரிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. யானையுடன் செல்லும் பாகன்கள், உதவியாளர், டிரைவர் உள்பட 13 பேருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு கோவில் யானைகளுக்கும் பரிசோதனை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments