மது போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

0 1618

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மது போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அத்தனூர் அருகே சென்ற அரசு பேருந்தை, மதுபோதையில் தடுத்து நிறுத்திய 3 பேர், பேருந்தின் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர், நடத்துனரை தகாத வார்த்தையில் பேசியும், சாலையில் செல்லும் மக்களிடையே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments