தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1166
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்று அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு வடக்கு மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும், சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் , மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments