கர்நாடகத்தில் 1600 டன் லித்தியம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு..!

கர்நாடகத்தில் 1600 டன் லித்தியம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு..!
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் சுமார் 1600 டன் லித்தியம் இருப்பது முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அணுசக்தி துறை சார்பில் மர்லாகல்லா, அல்லபட்னா பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் லித்தியம் இருப்பது தெரியவந்துள்ளது. தொலைத் தொடர்பு, விண்வெளி, செராமிக்ஸ், கண்ணாடி போன்ற பல்வேறு துறைகளில் லித்தியம் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
லித்தியம் அயன் பேட்டரியுடன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தயாரிக்கப்படுவதால், கடந்த சில வருடங்களில் லித்தியத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அனைத்து கட்ட ஆய்வுகளும் முடிந்த பின்பே வர்த்தக பயன்பாட்டுக்காக அதனை எடுக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
Comments