மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 50,256 ஆக உயர்ந்தது

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 50,256 ஆக உயர்ந்தது
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், வணிகநேர முடிவில் முதன்முறையாக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 49 விழுக்காட்டில் இருந்து 74 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால், இன்று சென்செக்ஸ் 458 புள்ளிகள் உயர்ந்து ஐம்பதாயிரத்து 256ல் நிறைவுற்றது.
தேசியப் பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 142 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 790 ஆக இருந்தது.
Comments