கணவர் இறந்த சோகத்தில், மனைவி - மகள் கிணற்றில் குதித்து தற்கொலை..!
கள்ளக்குறிச்சி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த தாமோதரன், இரு மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்த நிலையில், அவரது மனைவி திவ்யலட்சுமி தனது மகள் ஷாலிகா, மாமியார் லலிதா மற்றும் நாத்தனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவர் இல்லாமல் வாழ பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மாமியார் மற்றும் நாத்தனார் நகை, கேட்டு கொடுமைப்படுத்தியதே தனது மகள் தற்கொலைக்கு காரணம் என தந்தை புகார் அளித்துள்ளார்.
Comments