தமிழகத்தில் மீண்டும் ஒரு காமராஜ்... சம்பளம், பென்ஷன் தொகையை அப்படியே தானம் !

0 27707

ரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்த ஆ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தன் ஓய்வூதிய தொகையான 20,000 ரூபாயை,மின்சாரம் தாக்கி உயிரிழந்த பொறியியல் பட்டதாரி மாணவரின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக வழங்கியுள்ளார். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பள்ளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடிவந்த கோபிநாத், தன் நண்பர்களுடன் கட்டிடங்களில் பெயிண்டிங் வேலை செய்துவந்தார்.

கடந்த மாதம் சுக்காலியூர் அருகில் ஒரு தனியார் கட்டிடத்தில், பெயிண்டிங் வேளைக்குச் சென்ற கோபிநாத் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். தொடர்ந்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகனை இழந்து ஆறுதலின்றி தவித்துவந்த கோபிநாத்தின் குடும்பத்திற்கு  ஆ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தனது ஓய்வூதிய தொகை 20,000  ரூபாயை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, கிருஷ்ணராயபுரம்  தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினராக 2011 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட காமராஜ், தன் பதவிக்காலத்திலும், அவர் பெற்ற சம்பளத்தொகையை கொண்டு தன் தொகுதி மக்கள் பலருக்கும் உதவி செய்துவந்தார். ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, முதியோரின் மருத்துவச் செலவு எனப் பலரது கண்ணீரையும் துடைத்துப் புன்னகை மலர செய்துள்ளார் காமராஜ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments