டெல்லி டிராக்டர் பேரணி வன்முறை குறித்து விசாரணை கோரிய மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0 655
டெல்லி டிராக்டர் பேரணி வன்முறை குறித்து விசாரணை கோரிய மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது வன்முறை சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரித்து வருவதை குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டம் தன் கடமையை செய்யும் என்று பிரதமர் மோடி பேசியதையும் சுட்டிக்காட்டினர்.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் மத்திய அரசை அணுக அறிவுறுத்தினர். அதே போன்று விவசாயிகளை போதிய ஆதாரமின்றி பயங்கரவாதிகளாக ஊடகங்கள் அறிவிக்க கூடாது என்று உத்தரவிடக் கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments