23 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரியாணி.... விலை ஒரு பிளேட் ரூ. 20,000

0 17551

துபாயில் தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 20 , 000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான், உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. 

இந்தியா போலவே வளைகுடா நாடுகளிலும் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக , துபாயில் விதவிதமாக பிரியாணி தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஏராளமான பிரியாணி ரெஸ்டாரன்டுகளும் துபாய் முழுவதும் நிறைந்துள்ளன. இந்திய தயாரிப்பு பிரியாணியும் துபாயில் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த வகையில், துபாயில் செயல்பட்டு வரும் பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பிளேட்  அலங்கரிக்கப்பட்ட   பிரியாணியின் விலை  ரூ.20,000 ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் ஒரு பிளேட் பிரியாணியை உண்ண முடியும்.

பாம்பே போரோ ரெஸ்டாரன்ட் துபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியுடன் காஷ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மற்றும் மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும். பிரியாணியில் சாப்பிடக் கூடிய தங்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வெறும், 45 நிமிடங்ளில் இந்த பிரியாணியை தயாரித்து வழங்குகிறார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments