திரையரங்குகளில் மார்ச் 26-ம் தேதி வெளியாகிறது ’டாக்டர்’ திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 26-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என நடிகர் சிவக்கார்த்திக்கேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Comments