பிரசாத் ஸ்டூடியோ ஒருநாள் காணாமல் போய்விடும் - இளையராஜா

0 13977

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஸ்டூடியோக்கள் தற்போது காணாமல் போய்விட்டதாகவும், அதுபோல் பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போய்விடும் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் புதிதாக ஸ்டூடியோ திறந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கான பாடல்களின் ரெக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கினார். ஸ்டூடியோ திறப்பு விழாவில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பாடல்கள் தான் நம்மை கவர்ந்திழுக்க வேண்டும் எனக்கூறிய இளையராஜா, தற்போது வரும் பாடல்கள் அது போன்று இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments