இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலை., ரத்து செய்தது நியாயமில்லை - உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழகம், இரண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது நியாயமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசிடம் ஆலோசித்து படிப்பை தொடர உரிய முடிவெடுக்குமாறு, உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, நீதிபதி புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படிப்பை வழங்குவதைவிட பணத்திற்காக படிப்பை ரத்து செய்ய வேண்டியது அண்ணா பல்கலைகழகம் போன்ற கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த நடவடிக்கை அண்ணா பல்கலை கழகத்திற்கு அழகல்ல என்றும், அரசின் உதவி தேவை என்றால், மாநில அரசை நாடுமாறும், நீதிபதி அறிவுறுத்தினார்.
பணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதி புகழேந்தி, தீர்வை கண்டறிந்து வாருமாறு இருதரப்புக்கும் உத்தரவிட்டார்.
Comments