பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய பெண் மீது இளைஞர் கொலை வெறித் தாக்குதல்

0 5071

தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவில், பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய பெண் மீது இளைஞர் ஒருவர் கோடாரியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொர்லகுண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் தோட் என்பவர் பாலியல் தொல்லை அளித்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் தோட் நிர்பயா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ராகுல், புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவர் மீது கோடாரியால் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டார்.

இதில் படுகாயமடைந்த பெண் ரங்கா ரெட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ராகுல் தோட்டை கைது செய்த போலீசார், தாக்குதல் சம்பவத்தில் அவருக்கு உடைந்தையாக இருந்த மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments