சாலையில் கிடந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ரூ.3.83 லட்சம் திருட்டு..!

0 32918

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே சாலையில் கிடந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி 3 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயைத் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், செல்லும் வழியில் பர்ஸைத் தவற விட்டதாகக் கூறப்படுகிறது. ஏடிஎம் கார்டின் ரகசியக் குறியீட்டு எண்ணையும் அதிலேயே எழுதி வைத்திருந்ததால் பர்சைக் கண்டெடுத்தவர்கள் கார்டைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் நகை உள்ளிட்டவற்றை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான செல்போன் குறுந்தகவல்களை பாரத்து அதிர்ந்த தம்பதியினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏடிஎம் கார்டை எடுத்து பயன்படுத்திய சுபாஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments