டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் மக்களுக்கு இடையூறாக உள்ளது - மத்திய அரசு

0 788

டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினா எழுப்பினார். இதற்குப் பதிலளித்த உள்துறை இணையமைச்சர் கிசன் ரெட்டி, சிங்கு, திக்ரி, காசிப்பூர், சில்லா ஆகிய இடங்களில்  இரண்டரை மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது டெல்லி மக்களுக்கும், அண்டை மாநில மக்களுக்கும் இடையூறாக உள்ளதாகத் தெரிவித்தார்.

டெல்லியைப் பிற மாநிலங்களுடன் இணைக்கும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும், மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதாலும் இன்று காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments