சர்வதேச விமானக் கண்காட்சி.. போர் விமானங்கள் சாகசம்.!

0 1580

பெங்களூருவில், ஏரோ இந்திய சர்வதேச விமானக் கண்காட்சி தொடங்கியுள்ளது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீல வானில் சாகங்களை நிகழ்த்தின. 

பெங்களூருவின் புறநகர் பகுதியான எலஹங்காவில், இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்கு, "ஏரோ இந்தியா 2021" என்ற பெயரில், 3 நாள் சர்வதேச விமானக் கண்காட்சி, தொடங்கியுள்ளது. இதனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். 

சர்வதேச விமான கண்காட்சியில், இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.. 

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திய சாகசங்களை, இந்திய விமானப் படை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், சிறப்பு விருந்தினர்கள், பொதுப் பார்வையாளர்கள், மெய்சிலிர்க்க கண்டுகளித்தனர். 

இந்த விமானக் கண்காட்சியில், இந்தியாவின் சுகோய், தேஜஸ், பாசந்த், டோர்னியர், ஜாக்குவார் உள்ளிட்ட போர் மற்றும் கண்காணிப்பு விமானங்களும், பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களும், சாரங்க், துருவ் உள்ளிட்ட யுத்த மற்றும் மீட்புகால ஹெலிகாப்டர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், உலகளாவிய விமான நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்டின், டசால்ட் மற்றும் ஏர்பஸ் தவிர, இந்த நிகழ்ச்சியில் தலேஸ், பிஏஇ சிஸ்டம்ஸ் மற்றும் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான MBDA நிறுவனமும் பங்கேற்றுள்ளது. 

முன்னதாக, இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் வகையில், 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 83 இலகுரக தேஜஸ் போர்விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே, இந்த 83 தேஜஸ் போர் விமானங்கள், அதிநவீன நுட்பத்தில் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக, HAL என சுருங்க அழைக்கப்படும், பொதுத்துறை நிறுவனமான, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உடன், பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments