இந்தியா உள்ளிட்ட 20 நாட்டவர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லத் தடை : கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்தோர் சவூதி அரேபியாவுக்குச் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்த நாடுகளுக்குச் சென்றுவந்து 14 நாட்களே ஆகும் பிற நாட்டவர்களும் சவூதி அரேபியாவுக்குள் நுழையத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தூதரக அதிகாரிகள், தடை விதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சவூதி அரேபிய குடிமக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Comments