பேரறிஞர் அண்ணா நினைவு தினம் தலைவர்கள் மரியாதை!

0 1056
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் தலைவர்கள் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் மரியாதை செலுத்தினர். 

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்களும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

 இதேபோன்று, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுகவினருடன் பேரணியாக சென்ற மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments