தமிழக மீனவர்கள் 4 பேர் படுகொலை - இலங்கைக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்.பிக்கள் ஒருமித்த குரலில் கண்டனம்

0 670

இலங்கை கடற்படை தாக்குதலில், தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, தமிழக மீனவர்கள் 4 பேர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தார். அதிமுக எம்.பி தம்பிதுரையும், இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்தார். இதுகுறித்து, மத்திய அரசின் உடனடி நடவடிக்கை தேவை என, திமுக, அதிமுக எம்பிக்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.

இதற்கு விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுபோன்ற கொடூர செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என இலங்கை அரசாங்கத்திடம், திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாகவும், ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments